திடீரென கல்யாண மாலையுடன் வந்த தந்தை.. மனைவியைக் கண்டு அதிர்ந்துபோன மகன்

திடீரென கல்யாண மாலையுடன் வந்த தந்தை.. மனைவியைக் கண்டு அதிர்ந்துபோன மகன்

உத்திரப்பிரதேச மாநிலம் பவுடன் எனும் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 2016-ஆம் ஆண்டு பெண் ஒருவரைக் காதலித்து திருமணம் செய்துள்ளா

இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், திடீரென இருவருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டது. இதையடுத்து, திருமணம் முடிந்த 6 மாதத்தில் அவர்கள் இருவரும், விவகாரத்து பெற்றுப் பிரிந்து விட்டனர்.

இந்த நிலையில், அந்த இளைஞரின் தந்தை திடீரென்று காணாமல் போனார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் அந்த இளைஞரின் தந்தையைத் தேடிய நிலையில் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.

அப்போது, போலீசார் அந்த இளைஞரைக் காவல் நிலையம் வரவழைத்து ஒரு புகைப்படத்தைக் காட்டியுள்ளார்கள்.

அந்த புகைப்படத்தைப் பார்த்த நொடியில் அந்த இளைஞர் நொறுங்கிப்போனார். காரணம் அதில் மாலையும், கழுத்துமாக நிற்பது, ஆசை ஆசையாகக் காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்த மனைவியும், அந்த இளைஞரின் தந்தையும்.

மேலும், போலீசார் அழைத்து விசாரணை செய்ததில், அந்த பெண், தான் தன்னுடைய இரண்டாவது கணவரான மாமனாருடன் மகிழ்ச்சியாக வாழ்வதாகவும், அவருடனே வாழ ஆசைப்படுவதாகவும் காவல்நிலையத்தில் கூறியுள்ளார். இந்த சம்பவம் விசாரணை செய்த போலீசாரையே அதிர்ச்சியில் உறையவைத்தது.