முல்லைத்தீவு வீதி விஷ்வமடு வெலிக்கந்தல் சந்தியில் பாரவூர்தி மோதி 18 பசுக்கள் பரிதாபமாக இறந்தன

முல்லைத்தீவு வீதி விஷ்வமடு வெலிக்கந்தல் சந்தியில் பாரவூர்தி மோதி 18 பசுக்கள் பரிதாபமாக இறந்தன

பரந்தனில் இருந்து முல்லைத்தீவு வீதி விஷ்வமடு வெலிக்கந்தல் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 18 பசுக்கள் உயிரிழ்ந்துள்ளன.

பாரவூர்த்தி ஒன்றுடன் மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

அதி வேகமாக பயணித்துள்ள பாரவூர்த்தி வீதியில் இருந்த பசுக்கள் மீது மோதியதாக விஷ்வமடு பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்து கிளிநொச்சி காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.