புலோலியில் பாரம்பரிய கூட்டுறவு உணவகம் திறந்துவைப்பு!

புலோலியில் பாரம்பரிய கூட்டுறவு உணவகம் திறந்துவைப்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை புலோலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் கூட்டுறவு பாரம்பரிய உணவகம் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

 

வடமராட்சி  வடக்கு பிரதேச செயலர் நடராசா திருலிங்கநாதன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் விருந்தினர்கள்   மலர் மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபம் வரை வரவழைக்கப்பட்டு அங்கு மங்கல  சுடர்கள் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. 

 

அதனை தொடர்ந்து சைவ இறை  வணக்கம், கிறிஸ்தவ இறை  வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றது.

 

தொடர்ந்து ஆசி உரையை  வல்லிபுர ஆழ்வார் ஆலய பிரதம குரு சுதர்சன கணபதீஸ்வரகுருக்கள் நிகழ்த்தினார். 

 

அதனை தொடர்ந்து  கூட்டுறவு பாரம்பரிய உணவகத்தின் கட்டிடத்தினை சம்பிரதாய பூர்வமாக யாழ்ப்பாணம் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன், மற்றும் ஆரம்பிப்பதற்காக  நிதியாக  2.8 மில்லியனை வழங்கியிருந்த  யாழ்ப்பாணம் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனின் பிரதிநிதியான பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் சிறிகண்ணன் ஸ்ரீ பிரகாஷ் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். 

 

அதனை தொடர்ந்து கூட்டுறவு பாரம்பரிய உணவக  கட்டிட துறப்பினை புலோலி பல நோக்கு கூட்டுறவு சங்க தலைவரிடம் உத்தியோக பூர்வமாக கையளித்தார்.

 

அதனை தொடர்ந்து வரவேற்பு நடனம், வரவேற்புரை என்பன இடம்பெற்றன.

தலைமை உரையினை வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் நிகழ்தினார்.

 

இதில் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுக்கதீஸ், பருத்தித்துறை நகர பிதா வின்சன் டீ போல் டக்ளஸ் போல், வல்வெட்டித்துறை நகர சபை உப தவிசாளர் பத்மநாதன்,  தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், பருத்தித்துறை நகர சபை உறுப்பினர்கள், கூட்டுறவு தினைக்கள அதிகாரிகள், வடமராட்சி வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள், புலோலி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் பொது முகமையாளர், இயக்குனர்கள், பணியாளர்கள், பருத்தித்துறை போலீஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

 

இதற்கான தொடக்க நிதியாகவும், 28 இலட்சத்தினையும், புலோலி பல நோக்கு கூட்டுறவு சங்கம் 40 இலட்சத்தினையும், பருத்தித்துறை சமுர்த்தி வங்கி  உணவகத்திற்கு தேவையான  உபகரணங்களை  இரண்டரை இலட்சம் ரூபா நிதியினையும் வழங்கியிருந்தனர்.