பொதுப் பாதுகாப்பு அமைச்சரின் சகோதரர் வீதி விபத்தில் பலி

பொதுப் பாதுகாப்பு அமைச்சரின் சகோதரர் வீதி விபத்தில் பலி

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அவர்களின் சகோதரர் இன்று இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

பாணதெனிய - அனுராதபுரம் பிரதான வீதியின் மஹகல்கடவல பகுதியில் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த விபத்தில் மஹாஇலுப்பல்லம பகுதியைச் சேர்ந்த கே.எஸ்.எம். பியசேன திஸாநாயக்க என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மஹகல்கடவல பகுதியில் உள்ள தனது இளைய சகோதரரின் வீட்டில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, மீண்டும் தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மஹகல்கடவல வளைவுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் பின் பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.