எரிபொருள் விலை அதிகரிப்பு - மின்வெட்டு தொடர்பில் பொது மக்களுக்கு வந்துள்ள அறிவிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பு - மின்வெட்டு தொடர்பில் பொது மக்களுக்கு வந்துள்ள அறிவிப்பு

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரித்த போதும் நாட்டில் மின்வெட்டு இருக்காது என மின் மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகியுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் என கவலை கொள்ள தேவையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரியவருகிறது.

மேலும் அவரது தகவலில், மின்சார உற்பத்தியை பராமரிக்க போதுமான எரிபொருள் விநியோகம் நாட்டில் தற்போது உள்ளது. மின்வெட்டு விதிக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

வெப்ப மின் உற்பத்தியை ஆதரிக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தால் போதுமான டீசல் மற்றும் உலை எண்ணெய் விநியோகிக்கப்படுகிறது.

எரிபொருள் விலை அதிகரிப்பு - மின்வெட்டு தொடர்பில் பொது மக்களுக்கு வந்துள்ள அறிவிப்பு | Diesel Price Increase Powercut In Sri Lankaமாற்று எரிசக்தி ஆதாரங்கள் காரணமாக நிலைமை சீராக உள்ளது. நீர்மின்சாரத்தை உற்பத்தி செய்ய நீர்த்தேக்கங்களில் போதுமான நீர் திறன் எங்களிடம் உள்ளது. அத்துடன் தேசிய மின்கட்டமைப்புக்கு சூரிய சக்தியை பங்களிக்கும் வலுவான சூரிய ஒளியும் உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவைப் பொறுத்து எதிர்காலத்தில் நீர்மின் உற்பத்தி பாதிக்கப்படலாம் என்பதும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.