நேற்றும் அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்தில்
நேற்றைய தினம் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அங்கு நேற்று (12) மாத்திரம் 561 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகி இருந்த நிலையில், இதுவரையில் அந்த மாவட்டத்தில் மொத்தமாக 40,788 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் மொத்தமாக 56,464 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதுடன், நேற்று (12) மாத்திரம் அங்கு 528 பேருக்கு தொற்றுறுதியானது.
களுத்துறை மாவட்டத்தில் 313 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 97 பேருக்கும், குருணாகலில் 98 பேருக்கும், காலியில் 76 பேருக்கும் நேற்று (12) கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.