மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த நான்கு தினங்களில் 11,975 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த நான்கு தினங்களில் 11,975 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த நான்கு தினங்களில் 11,975 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்.மயூரன் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியினை ஏற்றிக் கொள்வதில் பொது மக்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எவ்வித அச்சமுமின்றி அதிகளவானோர் தடுப்பூசி ஏற்ற வருகை தருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாவட்டத்தில்  உள்ள 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முற்கட்டமாக 25,000 சைனோபாம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.