யாழில் இடம்பெற்ற தேர்தல் வன்முறைகள் தொடர்பில் வெளியான தகவல்

யாழில் இடம்பெற்ற தேர்தல் வன்முறைகள் தொடர்பில் வெளியான தகவல்

தேர்தல் தொடர்பில் வன்முறைகள் மற்றும் விதிமுறைமீறல்கள் தொடர்பில் இதுவரை 24 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் கேள்விகளுக்கு பதில் கூறும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து யாழ்ப்பாணத்தில் 24 தேர்தல் முறைப்பாடுகள் தேர்தல் திணைக்களத்திற்கு கிடைத்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார் நாடாளுமன்ற சட்டத்திற்கு அமைவாக வேட்பாளர்களின் படங்களை கட்சி அலுவலகங்களில் காட்சிப்படுத்த முடியாது, அவர்களின் படங்களை காட்சிப்படுத்த இரண்டு சந்தர்ப்பங்கள் மட்டுமே உண்டு, அவர்கள் பயணம் செய்யும் வாகனங்களிலும் அனுமதி பெறப்பட்டு நடத்தப்படும் பிரசாரம் இடங்களில் மாத்திமே காட்சிப்படுத்த முடியும். இதனைத் தவிர வேறு என்னவொரு சந்தர்ப்பத்திலும் படங்களை காட்சிப்படுத்த சட்டத்தில் இடமில்லை. அனுமதி பெறப்பட்ட தேர்தல் அலுவலகங்களில் 40சதுரஅடி அளவான பதாகைகளை பயன்படுத்த முடியும் அதிலும் கட்சியின் அல்லது சுயேட்கை் குழுவின் பெயர் சின்னம் மாத்திரமே பயன்படுத்திக் கொள்ள முடியும். சில சந்தர்ப்பங்களில் இரண்டு மொழிகளைப் பயன்படுத்தி காட்சிப்படுத்தலை மேற்கொள்வதாயின் 50சதுரஅடி அளவான பதாகைகளை பயன்படுத்த முடியும். வேட்பாளர்களின் பதாதைகளை அகற்றும் நடவடிக்கைகள், பிரதேச செயலக ரீதியில், பொலிஸாரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்