செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய விண்கல வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய இலங்கை பெண்

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய விண்கல வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய இலங்கை பெண்

செவ்வாய் கிரகத்தில் நாசா தரையிறக்கிய பெர்சிவரன்ஸ் (Perseverance) ரோவர் விண்கலத்தை வடிவமைத்தவர்களில் இலங்கையைச் சேரந்த பெண்ணும் முக்கிய பங்காற்றியுள்ளமை தெரியவந்துள்ளது.

இலங்கையை சேர்ந்த பொறியிலாளர் மெலனி மகாராச்சி என்பவரே Mars 2020 Perseverance என்ற ரோவர் விண்கலத்தின் உள்ளக மின் அமைப்பினை வடிவமைத்துள்ளார்.

2003ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் மெலனி மகாராச்சி அமெரிக்காவில் குடியேறினார். அங்கு அவர் விண்வெளி பொறியியல் பட்டப்படிப்பை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முடித்தார்.

இன்று உலகையே தன்வசம் திரும்பி பார்க்க வைத்துள்ள Tesla நிறுவனத்தின் SpaceX திட்டத்தில் பணிபுரிந்த அவர் பின்னர் போஜிங் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

2015ஆம் ஆண்டு நாசாவின் குழுவுக்கு தெரிவாகிய "மெலனி மகாராச்சி, Mars 2020 Perseverance திட்டத்தின் "designed the internal electrical" குழுவில் இடம்பிடித்தார்.

இதேவேளை செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பிய விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.

குறித்த விண்கலம் அதன் முதலாவது ஒளிப்படத்தை சில நிமிடங்களிலேயே பூமிக்கு அனுப்பியது. மண் மாதிரிகளைச் சேகரிக்கின்ற பணியை சில மாதங்களில் ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

பண்டைய உயிர் வாழ்க்கையின் சுவடுகளை லேஸர் மூலம் ஆய்வு செய்து தரவுகளை அது உடனுக்குடன் பூமிக்கு அனுப்பி வைக்கவுள்ளது.

இதேவேளை, செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஆய்வு மேற்கொள்ளும், ரோவர் விண்கலத்தின் ஆய்வு நடவடிக்கையில் இந்தியாவை சேர்ந்த பெண் விஞ்ஞானி, டொக்டர் சுவாதி மோகனுக்கு மிகப் பெரிய பங்களிப்பு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது