நாடாளுமன்றில் இடம்பெற்ற அனல் பறந்த விவாதம்

நாடாளுமன்றில் இடம்பெற்ற அனல் பறந்த விவாதம்

நாடாளுமன்றில் நேற்றையதினம் அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோருக்கு இடையில் சூடான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனி போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க தன்னை அனுமதிக்குமாறு அமைச்சர் பந்துல குணவர்தன கேட்டுக் கொண்டபோதிலும் நாடாளுமன்ற உறுப்பினர் கிரியெல்ல தொடர்ந்து குறுக்கிட்டு வந்தார்.

இந்தநிலையில் கிரியெல்ல எம்.பி ஹந்தான பகுதியில் சட்டவிரோதமாக நிலமொன்றை பெற்றுக்கொண்டதாக அமைச்சர் பந்துல தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த கிரியெல்ல எம்.பி தனிப்பட்ட முறையில் அமைச்சர் மீது தான் தாக்குதல் நடத்தவில்லை எனவும் சர்ச்சைக்குரியவகையில் தாய்லாந்துக்கு சென்ற விடயத்தை பகிரங்கப்படுத்துமாறு அமைச்சரை கேட்டுக் கொண்டார்