மேலும் சில யுக்ரேன் நாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு...!
சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வரும் திட்டத்தின் கீழ் யுக்ரேனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளில் மேலும் சிலர் இன்று (24) பிற்பகல் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
யுக்ரேன் விமான சேவைகளுக்குச் சொந்தமான பி.எஸ்.6385 ரக விமானத்தில் 189 சுற்றுலாப் பயணிகள் இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இவர்கள் இந்நாட்டிற்கு வருகை தந்த 12வது யுக்ரேன் நாட்டு சுற்றுலாக் குழுவினராவர்.
இதேவேளை யுக்ரேனிலிருந்து வருகை தந்திருந்த மேலும் 178 சுற்றுலாப் பயணிகள் அந்நாட்டை நோக்கி பயணித்துள்ளனர்.