மேல்மாகாண பாடசாலைகள் நாளை முதல் திறப்பு
கல்விப் பொதுத் தராதர சாதாரணதர மாணவர்களுக்காக மாத்திரம் நாளை(25) முதல் மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை திறக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி மேல்மாகாணத்திலுள்ள 11 கல்வி வலயங்களுக்கு உட்பட்ட ஆயிரத்து 576 பாடசாலைகளில் 907 பாடசாலைகள் மாத்திரம் 11ஆம் தர மாணவர்களுக்காக திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் திறக்கப்பட்ட போதிலும், கொரோனா பரவல் காரணமாக மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.