தெரனியகல பிரதேசத்தில் உள்நாட்டு வைத்தியரொருவரைத் தாக்கிய 6 பேர் கைது!
தெரனியகல பிரதேசத்தில் உள்நாட்டு வைத்தியரொருவர் உட்பட்ட குழுவொன்றுக்கு தாக்குதல் மேற்கொண்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹொரணை - கிாிவத்துடுவ பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இவ்வைத்தியர் மேலும் சிலருடன் தெரனியகல பிரதேசத்திற்குச் சுகவீனமுற்ற நிலையிலிருந்த நோயாளி ஒருவருக்கு சிகிச்சையளிப்பதற்காக சென்றுள்ளார்.
குறித்த நபரின் புதல்வர்கள் இருவரும் சிகிச்சை வழங்கப்பட்டதன் பின்னர் இவ்வைத்தியருட்பட்ட குழுவினருக்கு தடியால் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
காயங்களுக்குள்ளான வைத்தியருடன் மேலும் நால்வர் தற்போது அவிஸ்ஸாவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் அவர்களிடமிருந்து சுமார் நான்கு இலட்சம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இவ்வைத்தியர் உட்பட்ட குழுவினர் போக்குவரத்திற்கு பயன்படுத்திய மகிழுந்து மற்றும் முச்சக்கரவண்டி போன்றவற்றிற்கும் மேற்படி சந்தேகநபர்கள் தடியால் தாக்கி சேதமேற்படுத்தியுள்ளனர்.