யாழில் கடும் மழை; 1047 பேர் பாதிப்பு!

யாழில் கடும் மழை; 1047 பேர் பாதிப்பு!

யாழ் மாவட்டத்தில் காணப்பட்ட மழையுடன் கூடிய காலநிலை காரணமாக 358 குடும்பத்தை சேர்ந்த 1047 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

நேற்று காலையிலிருந்து யாழ்ப்பாண குடாநாட்டில் பெய்த மழையின் தாக்கத்தின் காரணமாக 57 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பாதிப்புகள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.