கினிகத்ஹேனை-பிளக்வோட்டர் தோட்டத்திற்கு நடமாட்டத்தடை!
கினிகந்ஹேனை, கெனில்வத்தை, பிளக்வோட்டர் தோட்டத்திற்கு நடமாட்டத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்படி தோட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் இத்தோட்டத்தில் 35 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு்ள்னதோடு, தோட்டத் தொழிலாளர்கள் 800 போில் 475 பேரின் பி.சீ.ஆர். பாிசோதனையும் மேற்கொள்ளளப்பட்டுள்ளது
இதனப்படிடையில் கினிகந்ஹேனை, கெனில்வத்தை, பிளக்வோட்டர் தோட்டத்தில் இதுவரை 47 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
நடமாட்டத் தடை விதிக்கப்பட்ட குறித்த பிரதேசத்தின் நடவடிக்கைகள் இராணுவப் படை மற்றும் காவல் துறையினாின் பாதுகாப்பின் கீழ் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.