சித்திரா தற்கொலை; நேற்றிரவு ஆத்திரத்தில் வவுனியா குடும்பஸ்தர் செய்த செயல்!
விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் சித்ரா (29). இவர் நேற்று புதன்கிழமை அதிகாலை 02.30 மணிக்கு, ஈ.பி.பி ஃபிலிம் சிட்டியில் நேற்று முன்தினம் படபிடிப்பு முடித்துவிட்டு ஹோட்டல் ரூமிற்கு வந்துள்ளார்.
மேலும் தனக்கு நிச்சயம் செய்த ஹேமநாத் என்பவருடன் சித்ரா ஒன்றாக தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், சித்ரா ஹேமநாத்திடம் தான் குளிக்கச் செல்வதாக கூறி ரூமிற்கு வெளியே செல்ல சொன்னதாகவும், வெகுநேரம் ஆனதால் அறையின் கதவை தட்டியதாகவும் ஹேமநாத் தெரிவித்துள்ளார்.
கதவை சித்ரா திறக்காததால் ஹோட்டல் ஊழியரிடம் சொல்லி மாற்று சாவியை எடுத்துவந்து திறந்து பார்த்தபோது சித்ரா அறையிலுள்ள மின்விசிறியில் புடவை மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் இலங்கை குடும்பங்களையும் கவர்ந்தவர் சித்திரா, இலங்கையில் பலர் இந்த தொடருக்கும், சித்திராவிற்கும் ரசிகர்களாக உள்ளனர்.
அப்படியிருக்க வவுனியாவில் நேற்றையதினம் இரவு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பார்த்துக்கொண்டிருந்த நிலையில் சித்திராவை தொலைக்காட்சியில் கண்டதும், நீ ஏன் இப்படி முடிவெடுத்தாய்யென றிமோட்டால் தொலைக்காட்சிக்கு எறிந்ததில் தொலைக்காட்சி உடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.