நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!
நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதன்படி நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 375 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 688 பேருக்கும், சிறைச்சாலை கொத்தணியில் 75 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் 8 ஆயிரத்து 172 கொவிட் 19 நோயாள்கள் தொடர்ந்தும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடம் மற்றும் யாழ்ப்பாண மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 363 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 3 பேருக்கு கொவிட் 19 தொற்றுறதியாகியுள்ளது.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி இதனைத் தெரிவித்துள்ளார்.
மருதனார்மடத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கும், வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த இருவருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.