100 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் 6 இலங்கையர்கள் கைது

100 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் 6 இலங்கையர்கள் கைது

தூத்துக்குடி கடற்பகுதியில் 100 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பயணித்துக்கொண்டிருந்த 6 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 9 தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த விசேட சோதனை நடவடிக்கைகளைத் தொடர்ந்து இன்றைய தினம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிடடுள்ளன.

நீர்கொழும்பில் வசித்து வரும் நபரொருவருக்கு சொந்தமான படகொன்றின் ஊடாகவே குறித்த போதைப்பொருள் கடத்தல் இடம்பெற்றுள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

மேலும், பாகிஸ்தான் பிரஜையொருவருக்கு சொந்தமான படகொன்றின் ஊடாக கராச்சி நகருக்கு அருகாமையில் உள்ள கடற்பரப்பில் வைத்து இந்த போதைப்பொருள் கைமாறியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த போதைப்பொருட்கள் அவுஸ்திரேலியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு அனுப்புவதற்கு திட்டமிட்டிருந்ததாகவும் சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.