இது உங்க பாஸ்வேர்டா? 2020 மோசமான பாஸ்வேர்டுகள் பட்டியல் வெளியீடு

இது உங்க பாஸ்வேர்டா? 2020 மோசமான பாஸ்வேர்டுகள் பட்டியல் வெளியீடு

2020 ஆண்டின் மிக மோசமான பாஸ்வேர்டுகள் இவை தான் என நார்டுபாஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

2020 ஆண்டின் மிக மோசமான பாஸ்வேர்டுகள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி இந்த ஆண்டு அதிகம் பயன்படுத்தப்பட்ட பாஸ்வேர்டு ‘123456' என நார்டுபாஸ் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பாஸ்வேர்டு சுமார் 2.3 கோடி முறை பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

 

 

உலகம் முழுக்க பெரும்பாலானோர் ‘123456' பாஸ்வேர்டை பயன்படுத்தி இருக்கின்றனர். நார்டுபாஸ் வெளியிட்டு இருக்கும் மோசமான பாஸ்வேர்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 200 பாஸ்வேர்டுகள் இடம்பெற்று இருக்கும். இந்த வரிசையில் இரண்டாவது மோசமான பாஸ்வேர்டு ‘123456789' இருக்கிறது. மூன்றாவது இடத்தில் ‘picture1' இருக்கிறது.

 

 பாஸ்வேர்டு

 

2015 ஆண்டு வாக்கில் வெளியான இதேபோன்ற அறிக்கையில் மென்பொருள் ஆய்வு நிறுவனம் மோசமான பாஸ்வேர்டுகளை பட்டியலிட்டது. அப்போதும் ‘123456' முதலிடம் பிடித்து இருந்தது. இதைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் ‘password' இருந்தது. 

 

தற்சமயம் ஐந்து ஆண்டுகள் கழிந்தும் மோசமான பாஸ்வேர்டுகள் பட்டியலில் ‘123456' முதலிடம் பிடித்து இருக்கிறது. ‘password' இம்முறை நான்காவது இடத்தில் உள்ளது. இந்த அறிக்கையின் மூலம் மக்கள் மிக எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள கூடிய பாஸ்வேர்டுகளை அதிகம் விரும்புவது தெளிவாக தெரிகிறது.