மத்திய கிழக்கில் நிலவும் இராணுவ நிலைமை - இலங்கையில் லிட்ரோ எரிவாயு குறித்து வெளியான தகவல்
மத்திய கிழக்கில் நிலவும் இராணுவ நிலைமை காரணமாக லிட்ரோ எரிவாயு பற்றாக்குறை இருக்காது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு நேற்று (08.03.2026) தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், 30000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிச் செல்லும் ஒரு கப்பல் தற்போது மாலைத்தீவில் நங்கூரமிடப்பட்டுள்ளது.
33,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிச் செல்லும் மற்றொரு கப்பல் மார்ச் 17 அன்று மாலைத்தீவை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தக் கப்பல்கள் இலங்கையின் உத்தரவுகளின்படி மாலைத்தீவுக்கு வந்து, அங்கிருந்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஒரு சிறிய கப்பல் மூலம் எரிவாயு நாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன.
இதுவரை ஒரு ஓமானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட எரிவாயு விநியோக டெண்டரை இந்த முறை ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவது தற்போதைய இராணுவ சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த எரிவாயு கப்பல்கள் போர் மண்டலம் வழியாக மாலைத்தீவுக்கு கொண்டு வரப்படாது. இந்தக் கப்பல்கள் அமெரிக்காவிலிருந்து ஆப்பிரிக்காவுக்குப் பயணித்து மாலைத்தீவை வந்தடைவதால், இராணுவ நிலைமை காரணமாக எரிவாயு விநியோகத்தில் எந்த இடையூறும் ஏற்படாது என சுட்டிக்காட்டியுள்ளார்.