இங்கிலாந்திலிருந்து வந்த தமிழருக்கு சொந்த வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி ; தமிழர் பகுதியில் சம்பவம்

இங்கிலாந்திலிருந்து வந்த தமிழருக்கு சொந்த வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி ; தமிழர் பகுதியில் சம்பவம்

திருகோணமலை - உவர்மலை லோவர் வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் கூரையிலிருந்து இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 வீட்டை பழுது பார்க்க சென்ற போது வீட்டின் உரிமையாளரால் வீட்டு கூரைக்கு மேல் கை குண்டுகள் இருப்பதாக திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்திலிருந்து வந்த தமிழருக்கு சொந்த வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி ; தமிழர் பகுதியில் சம்பவம் | Shock Awaited Tamil Who Returned From Abroadஇதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 02 கைக்குண்டுகளைக் மீட்டுள்ளனர்.

​​இந்த வீட்டின் உரிமையாளர் 1993ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் வசித்து வருகிறார் எனவும் 27.02.2026 அன்று இலங்கைக்குத் திரும்பியுள்ளார்.

அவரது மூத்த சகோதரர் வீட்டில் தங்கியுள்ளார் எனவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

இதேவேளை குறித்த கை குண்டை திருகோணமலை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் செயல் இழக்க செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.