வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை
ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியங்கள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை வேளையில் பனிமூட்டம் நிறைந்த வானிலை காணப்படுமெனவும் அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.