8 இலட்சம் பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் கண்டுபிடிப்பு

8 இலட்சம் பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் கண்டுபிடிப்பு

வவுனியா - பூவரசங்குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடத்திச்செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகளை காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலையடுத்து இன்று அதிகாலை இந்த கைது இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான முதிரை மரங்களும், அதனை கொண்டு செல்வதற்காக பயன்படுத்திய கெப்ரக வாகனமும் காவற்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, அனுராதபுரம் - இஹலகம பகுதியில் காட்டு யானையின் தாக்குதலினால் வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்தார்

அவரது வீட்டு வளாகத்திற்குள் நுழைந்த காட்டுயானை நேற்றிரவு குறித்த பெண்ணை தாக்கியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் இஹலகம பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவர் என காவற்துறை தெரிவித்துள்ளது.