கொரோனா வைரஸ் தொடர்பான அறிக்கை இந்த வாரம் சுகாதார அமைச்சிடம் கையளிப்பு

கொரோனா வைரஸ் தொடர்பான அறிக்கை இந்த வாரம் சுகாதார அமைச்சிடம் கையளிப்பு

மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலை கொத்தணியின் ஊடாக ஏற்பட்ட புதிய கொரோனா பரவல் தொடர்பான ஆய்வறிக்கையை எதிர்வரும் நாட்களில் சுகாதார அமைச்சிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் டெங்கு பரிசோதனை மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் நிலீகா மலவிகே இதனை தெரிவித்துள்ளார்.

வைரஸின் குணவியல்புகள் குறித்தும் வைரஸ் பரவலுக்கான காரணிகள் தொடர்பில் தற்போது இரசாயண பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.