கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊடகங்கள் ஒத்துழைக்க வேண்டும்: அமைச்சர் விடுத்த வேண்டுகோள்
கொரோனாவின் முதல் அலை நாட்டில் உருவானபோது அதைத் தோற்கடிக்க ஊடகங்கள் அதிக ஆதரவு வழங்கியது அதே போல இம்முறையும் அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அதற்காக அதிகபட்ச பங்களிப்பை வழங்குமாறு அனைத்து ஊடக நிறுவனங்களிடமும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் கொரோனா தொற்றின் போது மின்னியல் சார் ஊடக நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்கிய சில நிவாரணங்களைச் சங்கத்தின் பிரதிநிதிகள் நினைவு கூர்ந்தனர், மேலும் இம்முறையும் நிவாரண திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த காலங்களைப் போலவே நாட்டு மக்களின் ஆரோக்கியத்திற்காக ஊடகங்கள் ஒன்றிணைந்து இம்முறையும் செயற்படுவது தேசியப் பங்காகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.