அடுத்துவரும் நாட்கள் மிகுந்த அவதானமானவை- சுகாதார அமைச்சு

அடுத்துவரும் நாட்கள் மிகுந்த அவதானமானவை- சுகாதார அமைச்சு

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துச் செல்வதன் காரணமாக எதிர்வரும் நாட்கள் மிகுந்த அவதானம்மிக்கதாக மாறியுள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

ஹிரு தொலைக்காட்சியில் இன்று காலை இடம்பெற்ற 'பத்தரே விஸ்தரே' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது செயலிழந்து காணப்படும் பிசிஆர் பரிசோதனை இயந்திரத்தை மீண்டும் செயற்படுத்துவதற்காக சீன விசேட வல்லுனர்கள் இன்று இலங்கை வரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், தனிமைப்படுத்தல் என்பது சிறை வாழ்க்கை அல்ல எனவும், அது இந்த சமூகத்தின் நலன் கருதி மேற்கொள்ளப்படும் ஒரு விசேட செயன்முறையெனவும் மருத்துவர் ஜயருவன் பண்டார தெரிவித்தார்.