மதவழிபாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்
மதவழிபாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு சுகாதார அமைச்சு முக்கிய அறிவித்தலை விடுத்துள்ளது.
இதன்படி மத வழிபாடுளில் 50க்கும் குறைவானவர்கள் மாத்திரம் கலந்துகொள்ளுமாறு சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
குறிப்பாக நாளைய பௌர்ணமி தினத்தன்று அது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாட்டின் சில பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் வழமைபோன்று மதவழிபாடுகளை முன்னெடுக்க முடியாதெனவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.