ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான செய்தி
கம்பஹா மாவட்டத்திற்கு அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டமானது மறு அறிவித்தல் வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இன்று நள்ளிரவு முதல் மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தொடரும் என கூறப்பட்டுள்ளது.