இறக்குமதி செய்யப்படும் மீன்வகைகளுக்கான வரி அதிகரிப்பு..!!
இறக்குமதி செய்யப்பட்ட மீன், கருவாடு, மாசி, நெத்தலி மீன் ஆகிய அத்தியாவசிய பொருட்கள் மீதான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் மீன் விற்பனைகள் குறைவடைந்துள்ள நிலையில், அவை உலர்ந்த மீன்களாக மாறுவதனால் தேசிய உற்பத்தியாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய ஒரு கிலோகிராம் கருவாடுக்கு 127 ரூபாவும், மாசி ஒரு கிலோகிராம், 302 ரூபாய்க்கும் நெத்தலி மீன் ஒரு கிலோகிராமிற்கு ஒரு ரூபாயும் வரி அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.