நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் வெளியான விசேட செய்தி..!
அடுத்த வார நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி மாத்திரம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று இடம்பெற்ற கட்சி தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய சுகாதார சட்டவிதிகளுக்கு அமைய எதிர்வரும் 3 ஆம் திகதி முற்பகல் 10 மணி முதல் நண்பகல் 12 வரை நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.
இதற்கு முன்னர் அடுத்த மாதம் 3 ஆம் திகதி முதல் 4 நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்தது.