காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை மன்னாரில் நிர்மாணிக்க நடவடிக்கை..!

காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை மன்னாரில் நிர்மாணிக்க நடவடிக்கை..!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியத்தின் 200 மில்லியன் அமெரிக்க டொல்கள் முதலீட்டில் 100 மெகாவாற்று காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை மன்னாரில் நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

அதன் பௌதீக முன்னேற்றம் 73 வீதமாக் உள்ளதுடன், 2021 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் குறித்த நிர்மாண நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்திட்டத்திற்காகப் பெறப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் 47 மில்லியன் எஞ்சியுள்ளதுடன், குறித்த நிதியில் குறித்த மின்னுற்பத்தி நிலையத்தில் மேலும் 06 காற்று மின்னாலைகளை பொருத்தலாம் எனத் தெரியவந்துள்ளது.

அதற்கமைய செயற்படுவதன் மூலம் குறித்த மின்னாலையால் உற்பத்தி செய்யப்படும் மின் கொள்ளவு 20 மெகாவாற்றால் அதிகரிக்க முடியும்.

கொள்ளவை அதிகரிக்கும் யோசனைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளதுடன், அதற்கமைய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மின்சக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.