உயிரிழந்த மூவரும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் - வைத்தியர் சுதத் சமரவீர

உயிரிழந்த மூவரும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் - வைத்தியர் சுதத் சமரவீர

இலங்கையில் கொரோனா பாதிப்பால் நேற்றுமுன்தினம்(27) உயிரிழந்த மூவரும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கடந்த நாட்களில் அதிகரித்த கொரோனா மரணம் தொடர்பில் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த அவர்,

நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்ட , வயது கூடியவர்களுக்கு கொரோனா தொற்றினால் அதிக ஆபத்து உள்ளது.

எனவே, வயது கூடியவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது முக்கியம்.

மக்கள் அடிப்படை சுகாதார வழிகாட்டுதல்களை முறையாக மேற்கொண்டால் கொரோனா தொற்றில் இருந்து விடுபடமுடியும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.