நாட்டின் நலனை கருத்தில் கொண்டே ஆதரவாக வாக்களித்தேன்
நாட்டின் நலனை கருத்தில் கொண்டே 20 ஆவது திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாருளம் நாடாளுமன்ற உறுப்பினருமான டயனா கமகே தெரிவித்துள்ளார்
குறித்த சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏ. அரவிந்தகுமார், ஐக்கிய மக்கள் சக்தியின் டயானா கமகே, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, எம்.எஸ் தௌபிக், பைஸல் காசிம், ஹாபிஸ் நசிர் அஹமட், எச்.எம்.எம்.ஹாரிஸ் உள்ளிட்ட உறுப்பினர்கள் 20 ஆம் திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அதேநேரம் அகில இலங்கை மக்கள் காங்ரஸின் உறுப்பினரான இசாக் ரஹ்மான் மற்றும் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் அலி சப்ரி ரஹிம் ஆகியோர் 20 ம் திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.