மஞ்சள் விதைகளை கொள்வனவு செய்ய தீர்மானம்!

மஞ்சள் விதைகளை கொள்வனவு செய்ய தீர்மானம்!

வர்த்தக நிலையங்களில் நிலவும்  மஞ்சள் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, அடுத்த மாதம் முதல் மஞ்சள் விதைகளை கொள்வனவு செய்வதற்கு ஏற்றுமதி  விவசாயத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, விவசாயிகளுக்கு மஞ்சள் விதைகளை கொள்வனவு செய்வது தொடர்பில்  பத்திரிகைகள் மற்றும் விவசாய சேவை மையங்கள் மூலம் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், விதைகள் மூலம் மஞ்சள் செய்கையினை  ஊக்குவிப்பது  இதன் நோக்கமெனவும் விவசாயத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.