போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கு ஆலோசனை பெறுவதற்காக 1927 உடன் அழைப்புச் சேவை
போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கு ஆலோசனை பெறுவதற்காக 1927 உடன் அழைப்புச் சேவையொன்றை தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை அறிமுகப்படுத்தியுள்ளது.
நாட்டில் நிலவியுள்ள கொரோனா தாக்கத்தின் காரணமாக போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்காக வேண்டி வழங்கிவந்த ஆலோசனை, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சேவைகளை நடத்திவர முடியாததன் காரணத்தினால் இந்த அவசர அழைப்புச் சேவையை ஆரம்பித்துள்ளதாக அதன் தலைவர் விசேட வைத்தியர் லக்னாத் வெலகெதர தெரிவித்ததார்.
இதன் மூலம் போதைக்கு அடிமையானவர்களுக்கு இலவசமாக ஆலோசனை,சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.