வயது வித்தியாசமின்றி அனைவரும் மேற்கொள்ள ஏற்ற உடற்பயிற்சியில் ஒன்றுதான் மெல்லோட்டம் (Jogging) ஆகும். மெல்லோட்டத்தின் செய்முறையை அறிவதற்கு முன்பு அவற்றின் பலன்களைத் தெரிந்து கொள்வது அவசியம்.
உடற்பயிற்சியின் நோக்கம் உடலை வலிமைப் படுத்துவது மட்டும்தான் என நினைக்கின்றோம். அது உடலின் இயக்கங்களையும், உள்ளத்தையும் சீரடையச் செய்து நோய்களிலிருந்து நம்மைக் காக்கிறது, என்ற உண்மை நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. உடற்பயிற்சி என்றதும் "பளு" தூக்குவதும், "தண்டால்" எடுப்பதும்தான் நம் ஞாபகத்திற்கு வருகிறது. அன்றாட வீட்டுச் சாமான்களை நாமே சென்று வாங்கிவருவது, ஐந்து வேளைத் தொழுகைகளை நடந்தே சென்று தொழுவது. சைக்கிள் பயணம், நீச்சல் போன்றவைகள் அனைத்துமே ஒரு வகை உடற்பயிற்சிதான். என்றாலும் இவை முழுப்பலனையும் தராது. வயது வித்தியாசமின்றி அனைவரும் மேற்கொள்ள ஏற்ற உடற்பயிற்சியில் ஒன்றுதான் மெல்லோட்டம் (Jogging) ஆகும்.
மெல்லோட்டத்தின் செய்முறையை அறிவதற்கு முன்பு அவற்றின் பலன்களைத் தெரிந்து கொள்வது அவசியம்.
1)நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டுகிறது.
2)கிருமிகளை எதிர்த்துப் போராடும் இரத்த வெள்ளையணுக்களை வீரியத்துடன் செயல்படச் செய்கிறது.
3) நம் உணவின் மூலம் நம் உடலில் தோன்றும் கிடோன், யூரியா, லாக்டிக் அமிலம், ஹிஸ்டோமைன், பிராடி ஹிஸ்டோமைன் போன்ற கழிவுப் பொருட்கள் வெளியேற வழி செய்கிறது.
4) இரத்த ஓட்டம் சீரடைவதுடன் மயிரிழையை விட பத்து மடங்கு நுண்ணிய தந்துகிகள் வரை பாய்ந்து இறந்த செல்களை உயிர்பிக்கின்றது.
5) மெல்லோட்டத்தின் போது உடலின் அதிக அளவு கொழுப்பு கரைகிறது.
6) நுரையீரல், சிறுநீரகம், ஜீரண மண்டல உறுப்புக்கள், பித்தப் பை, கணையம், கல்லீரல் போன்ற உறுப்புக்கள் சீராக இயங்கத் தொடங்குகின்றன.
7) மெல்லோட்டத்தின் போது நம் உடலில் சுரக்கும் Endorphins என்னும் திரவம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள்
1) மெல்லோட்டம் என்பது ஓட்டத்திற்கும், நடைக்கும் இடைப்பட்டதாகும்.
2) ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் மெல்லோட்டம் செல்வது சிறந்து
3) ஓடும் போது நிதானமாக ஒரே சீரான வேகத்தில் ஓட வேண்டும்.
4) வேகம் வயது மற்றும் உடல் அமைப்பிற்குத் தகுந்தவாறு இருக்க வேண்டும்.
5) மூச்சிரைக்க ஓடக் கூடாது.
6) குறைந்த வேகத்தில் ஆரம்பித்து படிப்படியாக நேரத்தைக் கூட்ட வேண்டும்.
7) கை, கால்களில் விரைப்பாக வைக்காமல் தளர விட வேண்டும்.
8) மெல்லோட்டத்தின் போது நம் உடலில் ஏற்படும் உஷ்ணம் வெளிக் காற்று பட்டு குளிர்ந்து விடாத வாறு உரத்த ஆடைகளை அணிவது நல்லது.
9) இடைவிடாமல் தொடர்ச்சியாக ஓடினால்தான் உடலில் உஷ்ணம் ஏற்படும். இடையில் நிற்கக் கூடாது.
10) 30 நிமிட மெல்லோட்டத்திற்குப் பின் தசைகள் மற்றும் உறுப்புக்களை தளர்வடையச் செய்யும் Callisthanic Exercise பத்து நிமிடங்கள் செய்வதன் மூலம் தசை வலிகள் ஏற்படாது.
11) நாள்தோரும் மெல்லோட்டம் செல்ல வேண்டும்.
12) மெல்லோட்டம் செல்ல காலை வேளையே சிறந்தது.