100 வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வெளியீட்டு விவரம்

100 வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வெளியீட்டு விவரம்

00 வாட் பாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் தொழிலநுட்பத்தின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

100 வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வெளியீட்டு விவரம்

வயர்லெஸ் சார்ஜிங்

 

 

ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களான ஒன்பிளஸ், ஒப்போ, விவோ, சியோமி, சாம்சங் மற்றும் ஹூவாய் சமீப காலமாக பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்த துவங்கி இருக்கின்றன. பாஸ்ட் சார்ஜிங் மட்டுமின்றி வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பமும் பிரபலமான ஒன்றாக மாறி வருகிறது. 

 

 

தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் வயர்லெஸ் சார்ஜிங்கில் 100 வாட் மின்திறனை வழங்கும் தொழில்நுட்பம் விரைவில் சாத்தியமாகும் என கூறப்படுகிறது. சில ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 100 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை தங்களின் ஸ்மார்ட்போன்களில் வழங்க 2021 ஆண்டை இலக்காக நிர்ணயித்து இருப்பதாக தெரிகிறது.

 

 சியோமி டீசர்

 

இதுவரை எந்த ஸ்மார்ட்போனிலும் 100 வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படவில்லை. சியோமி நிறுவனம் தற்சமயம் 55 வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்நிறுவனம் விரைவில் 100 வாட் திறனை வழங்க முடியும் என கூறப்படுகிறது. 

 

சியோமி வரிசையில் ஒப்போ நிறுவனமும் இணையலாம் என தெரிகிறது. இந்நிறுவனம் 65 வாட் ஏர்வூக் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. இது 4000 எம்ஏஹெச் பேட்டரியை வயர்லெஸ் முறையில் 30 நிமிடங்களில் சார்ஜ் செய்துவிடும். எனினும், இதுவரை இந்த அம்சம் சந்தையில் வழங்கப்படவில்லை.