என்னுடைய அடுத்த காதல்: சமந்தாவிற்கு நாக சைதன்யா கொடுத்த நச் பதிலடி

என்னுடைய அடுத்த காதல்: சமந்தாவிற்கு நாக சைதன்யா கொடுத்த நச் பதிலடி

சமந்தா நாகசைதன்யா ஜோடிகள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்ட நிலைியல், தனது அடுத்த காதல் குறித்து நாக சைதன்யா வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகின்றது.

காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் திருமண முறிவு ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

திருமணம் செய்து பயங்கர அலப்பறை செய்த இந்த ஜோடிகளின் பிரிவுக்கு காரணம் என்னவென்று தெரியாமல் தற்போதும் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

இவர்களின் பிரிவினை தொடர்ந்து சமந்தா ஏகப்பட்ட கருத்துக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்தாலும் நாக சைதன்யா எதையும் வெளிப்படையாக கூறாமல் அமைதியாக இருந்து வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்னுடைய அடுத்த காதல் என ஒரு புத்தகத்தின் புகைப்படத்தை போட்டு பதிவிட்டுள்ளார்.

சமந்தா நாக சைதன்யா மீது குற்றம் போன்று பல பதிவுகளை சமீப நாட்களாக வெளியிட்ட நிலையில், தற்போது நாக சைதன்யாவின் பதிவினை அவதானித்த ரசிகர்கள் சமந்தா மீது தப்பு இருப்பது போன்று தெரிவதாக புலம்ப ஆரம்பித்துள்ளனர்.