Breaking News
Home / latest-update / அந்தரங்க கணொளிகளை கொண்டு இளம் பெண்களை மிரட்டிய நபர் பொலிஸாரால் கைது..!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

அந்தரங்க கணொளிகளை கொண்டு இளம் பெண்களை மிரட்டிய நபர் பொலிஸாரால் கைது..!!

பொலிஸ் உயர் அதிகாரிகளின் பெயரை தெரிவித்து பல்வேறு குற்றச் செயல்களில் கைது செய்யப்பட்டு ஆஜர்படுத்தப்படும் சந்தேக நபர்களின் உறவுகளிடம் ஈசி காஸ் மூலம் பண மோசடியில் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்த முன்னாள் பிரதி அமைச்சரின் உதவியாளரும் முன்னாள் இராணுவ வீரனுமான 35 வயதுடைய ஆண் ஒருவரை இன்று வியாழக்கிழமை (12) அதிகாலை கைது செய்துள்ளதாக மட்டு ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவிக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ். சமந்த தலைமையிலான புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இராணுவத்தில் சேர்ந்து பயிற்சியின் பின்னர் அங்கிருந்து தப்பிவந்த நிலையில் குறித்த பிரதி அமைச்சரின் நீண்ட நாள் உதவியாளராக கடமையாற்றி வந்துள்ளதுடன் பிரதேசத்தில் பல்வேறு குற்றச் செயல்கள் மூலம் கைது செய்யப்படும் சந்தேக நபர்களின் உறவினர்களிடம் பொலிஸ் உயர் அதிகாரிகளின் பெயரை பயன்படுத்து அவர்களிடம் பண மோசடி மற்றும் சிலருடைய அந்தரங்க விடயங்களை வீடியோ அல்லது புகைப்படம் போன்றவற்றை வைத்து அவர்களிடம் அதனை முகநூலில் பிரசுரிக்கப் போவதாக மிரட்டி பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார் எனவும்,ஜ.எஸ்.ஜ.எஸ். தீவிரவாதியான ஸாரானின் நுவரெலிய முகாமில் பயிற்சி பெற்றார் என சந்தேகத்தில் பண்டாரவளையில் வைத்து கைது செய்து பின்னர் 21 நாளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டார் எனவும் பல சிம் காட் அட்டைகளை வைத்து இவ்வாறான பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் இந்த நிலையில் தற்போது பெண் ஒருவரிடம் ஒரு இலச்சத்து 15 ஆயிரம் ரூபாவை ஈசிகாஸ் மூலம் மோசடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டார் என பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

Check Also

வரி ஏய்ப்பு புகார் எதிரொலி – ராஷ்மிகா நேரில் ஆஜராக உத்தரவு

வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக நடிகை ராஷ்மிகா வீட்டில் நடந்த சோதனையைத்தொடர்ந்து விசாரணைக்காக அவரை நேரில் ஆஜராக வருமான வரித்துறை …