பளை பகுதியில் மின்சாரம் தாக்கி 31 வயது இளைஞன் பலி
பளை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட பனிக்கையடி இயக்கச்சி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
31 வயதுடைய சிவகுமார் சிவதாஸ் இளைஞனே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
மின்சார இணைப்பு வேலை
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, குறித்த இளைஞன் மின்சார இணைப்பு வேலைகளை செய்து கொண்டிருக்கும்போது மின்சாரம் தாக்கி உள்ளது.

இந்நிலையில், உடனடியாக பளை வைத்தியாசலைக்கு கொண்டு செல்லும் போது இளைஞன் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.