யாழில்.கடலில் மிதந்து வந்த மீனவரின் சடலம்!

யாழில்.கடலில் மிதந்து வந்த மீனவரின் சடலம்!

யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்கு கடலுக்கு சென்றவர் கடலில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அராலி மத்தியை சேர்ந்த செல்லையா சிவகுமார் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த கடற்தொழிலாளி இன்றைய தினம் வியாழக்கிழமை காலை தொழிலுக்காக கடலுக்கு சென்ற நிலையில் , மதியம் அவரது சடலம் கடலில் மிதந்த நிலையில், சக கடற்தொழிலாளர்களால் அடையாளம் காணப்பட்டு , மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து , சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.