இஸ்ரேலையும் விட்டுவைக்காத பதிலடி! தாக்குதலில் இருந்து அமெரிக்கா தப்பாது என்கிறது ஈரான்

இஸ்ரேலையும் விட்டுவைக்காத பதிலடி! தாக்குதலில் இருந்து அமெரிக்கா தப்பாது என்கிறது ஈரான்

தனது உள்கட்டமைப்பு மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் ஈரான் பதிலடி கொடுக்கும் என்றும், அந்தப் பதிலடியிலிருந்து இஸ்ரேலும் தப்பாது என்றும் ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு செயலாளர் எச்சரித்துள்ளதாக மத்திய கிழக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னரே எச்சரித்தபடி, ஈரானிய உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்ட றிலையில் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு மன்றத்தின் செயலாளர் முகமது பாகர் சுல்காத்ரினால் மேற்படி எச்சரிக்கை வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ஈரானிய ஆயுதப் படைகளின் எதிர்வினையிலிருந்து இஸ்ரேல் பாதுகாப்பாக இருக்காது என்று அவர் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஈரானின் எதிரொலி

ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்லும் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய சமீபத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறி, அமெரிக்கா புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் தெற்கு ஈரானில் உள்ள பல நகரங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

இஸ்ரேலையும் விட்டுவைக்காத பதிலடி! தாக்குதலில் இருந்து அமெரிக்கா தப்பாது என்கிறது ஈரான் | Iran Going Launch Attack That Israel Cannot Avoid

மேலும், வடகிழக்கு ஈரானில் உள்ள இரண்டு தொடருந்து பாலங்களையும் இந்த தாக்குதல் குறிவைத்தது.

இதற்கு பதிலடியாக, குவைத், பஹ்ரைன், கட்டார் மற்றும் ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் வசதிகள் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையும் இராணுவமும் தெரிவித்துள்ளன.

சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட அமைதிப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, ஈரானும் அமெரிக்காவும் இறுதி உடன்பாட்டை எட்டுவதற்காக 60 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில் இந்த மோதல்கள் நிகழ்ந்தமை அமைதியடைந்த மத்தியகிழக்கின் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.