இனந்தெரியாத விஷமிகளின் வெறிச்செயல் -பல நூறு ஏக்கர் பயறுசெய்கை எரிந்து நாசம்

இனந்தெரியாத விஷமிகளின் வெறிச்செயல் -பல நூறு ஏக்கர் பயறுசெய்கை எரிந்து நாசம்

விவசாயிகள் பலநூறு ஏக்கரில் மேற்கொண்ட பயறு செய்கைக்கு இனந்தெரியாத விஷமிகள் தீவைத்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் பேராறு பகுதியில் அமைந்துள்ள வயல் நிலங்களில் விவசாயிகள் பயறு செய்கைகளை மேற்கொண்டுள்ள நிலையிலேயே இவ்வாறு இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளன.

தற்போது பயறு செய்கை அறுவடை செய்து வருவதோடு,அறுவடைக்கு தயாரான பல ஏக்கர் செய்கைகள் தீக்கிரையாகியுள்ளன.

இவை தொடர்பாக கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் விவசாயிகளினால் முறைப்பாடு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.