மோட்டார் வாகன இறக்குமதி தடையினை நீக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

மோட்டார் வாகன இறக்குமதி தடையினை நீக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

மோட்டார் வாகன இறக்குமதி தடையினை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றுகையில் அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன் மோட்டார் வாகன இறக்குமதிக்கு தடைவிதிப்பதற்கான காரணம் என்னவென்று அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மோட்டார் வாகன இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டதன் காரணமாக நடுத்தர வர்க்கத்தினர் மாத்திரம் அன்றி அரச மற்றும் தனியார் துறையில் பணியாற்றுபவர்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மோட்டார் வாகன  இறக்குமதி தடையினை நீக்க முடியாதெனின் அதற்கான தெளிவு படுத்தல்களை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.