இந்தியாவில் 5 நாட்களாக புதிய நோயாளிகள் எண்ணிக்கையைவிட குணமடையும் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனாவில் இருந்து தினசரி குணமடையும் நோயாளிகளின் எண்ணிக்கை, புதிய நோயாளிகளின் எண்ணிக்கை விட அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் அதே வேளையில் குணமடையும் நோயாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. தற்போது புதிய நோயாளிகள் எண்ணிக்கையை விட தினசரி குணமடையும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

 

நேற்று காலை நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 56,46,011 என்ற அளவில் இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 83,347 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 45,87,614 ஆக உயர்ந்தது. 24 மணி நேரத்தில் 89746 பேர் குணமடைந்திருந்தனர். 

இதேபோல் 22ம் தேதி புதிய பாதிப்பு 75,083 ஆகவும், குணமடைந்தவர்கள் 101468 ஆகவும் இருந்தது. 21ம் தேதி பாதிப்பு 86961 ஆகவும், குணமடைந்தவர்கள் 93356 ஆகவும், 20ம் தேதி புதிய பாதிப்பு 92605 ஆகவும், குணமடைந்தவர்கள் 94612 ஆகவும் இருந்தது. 19ம் தேதி பாதிப்பு 93337 ஆகவும், குணமடைந்தவர்கள் 95880 ஆகவும் இருந்தது.

 

இதன்மூலம், 5 தினங்களாக தொடர்ச்சியாக புதிய நோயாளிகள் எண்ணிக்கையை விட தினசரி குணமடையும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது கொரோனா தடுப்பு பணியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.