இந்திய குடியுரிமையை பெற்ற ஸ்ரீலங்கா பிரஜைகள் தொடர்பான தகவல் வெளிவந்தது
கடந்த 2017 முதல் 58 ஸ்ரீலங்கா பிரஜைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராஜ் மாநிலங்களவைக்கு தெரிவித்துள்ளார்.
2017 முதல் செப்ரெம்பர் 17, 2020 வரை குடியுரிமை வழங்குவது குறித்த புள்ளிவிவரங்களை முன்வைக்கும் போது அவர் இதை தெரிவித்தார்.
2120 பாகிஸ்தானியர்கள், 188 ஆப்கானியர்கள் மற்றும் 99 பங்களாதேஷியர்களுக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஸ்ரீலங்காவிலும் இரட்டைக்குடியுரிமை பெற்ற பலர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.