சர்வதேச கல்வி மையமாக இந்தியா மாறும் – நரேந்திர மோடி

சர்வதேச கல்வி மையமாக இந்தியா மாறும் – நரேந்திர மோடி

புதிய கல்வி கொள்கை மூலம் சர்வதேச கல்வி மையமாக இந்தியா மாறும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கவுகாத்தியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “இளைஞர்களின் சிந்தனையில் தான் நாட்டின் எதிர்காலம் உள்ளது. உங்களின் கனவுகள் தான்  இந்தியாவை உருவாக்கப்போகிறது.

எதிர்காலத்திற்கு தயாராவதற்கான நேரம் இது. சர்வதேச கல்வி மையமாக இந்தியாவை தேசிய கல்வி கொள்கை உருவாக்கும். சிறப்பாக செயல்படும் உயர்கல்வி நிறுவனங்கள் வெளிநாடுகளில் கிளைகள் துவங்க ஊக்கமளிக்கப்படும். இதன்மூலம் புதிய கல்வி கொள்கை சர்வதேச கல்வி மையமாக மாறும்” எனத் தெரிவித்துள்ளார்.