கொரோனா வைரஸ் : தமிழகத்தில் 9 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் இன்று (சனிக்கிழமை) 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் நான்கு பேர் ஸ்டான்லி அரச மருத்துவமனையிலும், 3 பேர் கீழ்பாக்கம் அரச மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயது மூதாட்டி, ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 77 வயது முதியவர் உட்பட 9 பேர் கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை மேலும் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.