இந்தியாவில் நேற்றைய நாளில் மாத்திரம் 1,149 கொரோனா மரணங்கள் பதிவு

இந்தியாவில் நேற்றைய நாளில் மாத்திரம் 1,149 கொரோனா மரணங்கள் பதிவு

கொவிட் 19 தொற்று காரணமாக இந்தியாவில் நேற்றைய நாளில் மாத்திரம் ஆயிரத்து 149 புதிய மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்தநாட்டு சுகாதார துறை அறிவித்துள்ளது.

அத்துடன் குறித்த காலப்பகுதியில் 92 ஆயிரத்து 432 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மாத்திரம் இதுவரையில் கொவிட்; 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 53 இலட்சத்து 98 ஆயிரத்து 230 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இந்த வைரஸ் தொற்று காரணமாக அங்கு 86 ஆயிரத்து 774 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை சர்வதேச ரீதியில் கொவிட் 19 தொற்றுதியானவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 97 இலட்சத்து 4 ஆயிரத்து 684 ஆக உயர்ந்துள்ளது.

இந்த வைரஸ் தொற்று காரணமாக இதுவரை உலகளவில் 9 இலட்சத்து 60 ஆயிரத்து 838 பேர் உயிரிழந்துள்ளனர்.

எவ்வாறாயினும், 2 கோடியே 25 இலட்சத்து 70 ஆயிரத்து 451 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.