கர்நாடக துணை முதல் மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி

கர்நாடக துணை முதல் மந்திரி அஷ்வத் நாராயணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கர்நாடகாவில் முதல் மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அவரது அரசில் துணை முதல் மந்திரியாக அஷ்வத் நாராயண் இருந்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

 

இதுபற்றி அஷ்வத் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், சட்டசபை கூட்டத்தொடர் வரவுள்ள நிலையில், கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன்.

அதன் முடிவு வெளிவந்துள்ளது. அதில் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனக்கு அறிகுறிகள் எதுவுமில்லை.  நான் வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்தி கொள்வேன்.

 

என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ளும்படி வேண்டி கேட்டு கொள்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.